புதுச்சேரியில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு தீபாவளியையொட்டி இரவில் கடைகளைத் திறக்கவும், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க புதுவையில் கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்புகள் வரை செயல்படுகிறது. வரும் நவம்பர் 8-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதுவையில் கடந்த மாதம் 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று இரவுடன் முடிவவடைகிறது. இதையடுத்து மேலும் சில தளர்வு அளித்து வரும் நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவைப் புதுவை அரசு செயலர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறும்போது, ''புதுவையில் உள்ள திரையரங்குகள் 100 சதவீதப் பார்வையாளர்களுடன் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம். புதுவையில் 4 காட்சிகளுடன் இயங்கி வந்த திரையரங்குகள் நாளை (திங்கட்கிழமை) முதல் நான்கு காட்சிகளுடன் 100 சதவீதம் இருக்கைகள் உடன் இயங்க அனுமதி தரப்படுகிறது.
தீபாவளியையொட்டி இரவு நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது இரவு நேரத்தில் கடைகளைத் திறக்கலாம். பொருட்கள் வாங்கவும் விற்பனை செய்யவும் இரவு முழுவதும் அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கு தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இரவு 11 முதல் காலை 5 வரையிலும் தீபாவளியையொட்டிக் கடைகள் இயங்கலாம். அதேபோல் சூரசம்ஹாரம் உட்பட மத நிகழ்வுகள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறலாம்'' என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago