பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது.
பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழகஅரசின் சார்பில் முதல்வர்ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
» தமிழகத்தில் கனமழை: 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
» முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை: கேரள அரசு கேடு செய்ய முனைகிறது- வைகோ குற்றச்சாட்டு
முன்னதாக, முதல்வர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.
முதல்வர் வருகையை ஒட்டி மதுரை, பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago