உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினி விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (28.10.21) இரவு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி நலமாக இருப்பதாகவும், கூடிய விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவருடைய குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், ''தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறந்த மருத்துவர் குழு அவரது உடல் நலனை முழுமையாக ஆராய்ந்து, ரத்தத்தில் அடைப்பை நீக்கும் சிகிச்சையை (carotid artery revascularization) பரிந்துரைத்துள்ளது. இன்று (29 அக்டோபர் 2021) அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ரஜினிகாந்த் நன்றாகத் தேறி வருகிறார். இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்குத் திரும்புவார்'' என்று காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ரஜினி நலம்பெற வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
» ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ முன்னிட்டு இணையவழி விழிப்புணர்வு உரையரங்கம்
» 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago