சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 29) தன் ட்விட்டர் பக்கத்தில், "சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டில் சேரும் மாணவர்களுக்கு அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது நியாயமல்ல!
ஒரே கல்லூரியில் புதிதாகச் சேரும் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.13,610 கட்டணம் செலுத்தும் நிலையில், 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் ரூ.4 லட்சமும், அதற்கு முன் சேர்ந்தவர்கள் சில ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம், சில ஆண்டுகளுக்கு ரூ.5.44 லட்சம் செலுத்துவது என்ன நியாயம்?
ஏற்கெனவே சேர்ந்த மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு மட்டும்தான் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அரசுக்கு இது பெரும் சுமையல்ல. இந்தச் சுமையையும் அரசு ஏற்றுக்கொண்டு, மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.13,610 ஆகக் குறைக்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.
» ஒவ்வொருவரும் தன் வருவாயில், ஒரு பகுதியைச் சேமிக்கவேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள்
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 secs ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago