சென்னை எழில்நகரில் 2 எம்.எல்.டி தண்ணீர் வழங்கும் திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் - எழில்நகரில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 20 லட்சம் லிட்டர் (2 எம்.எல்.டி.,) தண்ணீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வர் கடந்த 23-10-2021 அன்று எழில்நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது எழில்நகரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு 10 லட்சம் லிட்டர் (1 எம்.எல்.டி.,) போதுமானதாக இல்லை. எனவே எங்களுக்கு கூடுதாக தண்ணீர் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்தனர்.

அவர்களுக்கு கூடுதலாக 10 லட்சம் லிட்டர் (1 எம்.எல்.டி.,) தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி இன்று சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதனால் எழில்நகருக்கு 7 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கப்பெற்ற தண்ணீர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கையின் காரணமாக 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

இதுவரை எழில்நகருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நெமிலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் நெமிலியிலிருந்து கண்ணகி நகருக்கும், கண்ணகி நகரிலிருந்து எழில்நகருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து நேரடியாக எழில்நகருக்கு குடிநீர் வழங்க எழில்நகர் வாழ் பொதுமக்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இத்திட்டத்தினை தொடங்குவதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ரூ. 1 கோடியே 39 லட்சத்தினை சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கியுள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்