புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாதத்துக்கு ரூ. 3.2 கோடி கூடுதல் செலவாகும். 20 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
நாடு முழுவதும் கரோனா பரவலைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரி முதல் கடந்த ஜூலை வரை 3 மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப் படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கரோனா தொற்றுக்காக பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டது.
ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் கடந்த ஜூலையில் கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. அதாவது 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதையடுத்து மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இது நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஏற்கெனவே 28 சதவீதம் அகவிலைப்படியானது 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.இந்த உயர்வு புதுச்சேரியிலும் நடைமுறைக்கு இன்று வந்துள்ளது.
புதுச்சேரி தலைமை செயலக ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ராஜேந்திரன் கூறுகையில், "மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் புதுச்சேரியிலும் முதல்வர் ரங்கசாமி அமல்படுத்தியுள்ளார்.
கடந்த 2017 முதல் 2019 வரை அகவிலைப்படி அமலாக்குவதில் புதுச்சேரியில் 3 முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை காலதாமதம் ஆனது. தற்போது விரைவாக முதல்வர் வழங்கியுள்ளார்" என்று குறிப்பிட்டனர்.
அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "அகவிலைப்படி இந்த உயர்வு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். மாதத்துக்கு ரூ. 3.2 கோடி இதற்கு கூடுதல் செலவாகும்" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago