புதுச்சேரியில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 11.01 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை தரப்பில், “புதுவையில் 2 ஆயிரத்து 618 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் 70 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 9 பேர் என 87 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 215 பேர், காரைக்காலில் 94 பேர், ஏனாமில் 3 பேர், மாஹேவில் 55 பேர் என 367 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 454 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 33 பேர், காரைக்காலில் 6 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 3 பேர் என 43 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
» முதுகலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: நவ.20 கடைசி
» திருச்சி அருகே இரு வேறு இடங்களில் இடி தாக்கி பெண் உட்பட 2 பேர் பலி
மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,857 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 11,1,528 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago