தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரம்: சங்கர் ஜிவால் தகவல்

By செய்திப்பிரிவு

தீபாவளியை முன்னிட்டு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகரில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளோம். கரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க சென்னை பெருநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்துள்ளோம்.

சென்னையில் 7,800 திருடர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்