முதல்வர் முன்னிலையில் 15க்கும் மேற்பட்ட அதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுக.,வில் இணைந்தனர்
இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “ முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இன்றுகாலை, சென்னை வடக்கு மாவட்டம், அதிமுக.வைச் சேர்ந்த திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.சுப்புரு, வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஷ், வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.ராஜாமுகமது வடசென்னை வடகிழக்கு மாவட்ட மருத்துவர் அணி மாவட்டச் செயலாளர் மருத்துவர் பி.புகழேந்தி, வடசென்னை கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா, இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில தலைவர் மருத்துவர் பி.செந்தமிழ்பாரி, பெரம்பூர் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.எஸ்.அஸ்லாம், வட்டச் செயலாளர் எஸ்.பரிமளம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் எஸ்.வி.ரவி, வடசென்னை கிழக்கு எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மூர்த்தி, வடசென்னை தெற்கு (கிழக்கு) எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராமமஞ்செரி ஆர்.நடராஜன், வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ந.சேகர் (எ) பிரஸ் சேகர், வடசென்னை தெற்கு மாவட்டம், 55வது வட்ட அவைத்தலைவர் ம.மனோகர், மற்றும் அமமுக. கட்சியைச் சேர்ந்த மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் ஆகியோர். திமுக.,வில் இணைந்தனர்.
இந்த இணைவில் இந்து அறநிலயைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் வி.கலாநிதி வீராசாமி, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளையஅருணா, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜே. ஜான் எபினேசர் மற்றும் பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago