பாம்பனில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகளுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சீதனமாக வழங்கிய நண்பர்களின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்தியா முழுவதும் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது க்ரூட் பெட்ரோலியத்தின் சர்வதேச விலை ஒரு பீப்பாய் 65 டாலராக இருந்தது. மேலும் உலகளவில் கரோன பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக க்ரூட் பெட்ரோலியத்தின் விலை மேலும் சரிந்தது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது கரோனா தளர்வுகளால் வாகனங்களின் இயக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
குறிப்பாக தற்போது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ள பெட்ரோல் லிட்டர் 104 ரூபாய்கும், டீசல் லிட்டர் 100 ரூபாய்க்கும் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்வு காரணமாகச் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவும் அதிகரித்து காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ராமேசுவரம் அருகே பாம்பனில் புதுமண திருமண தம்பதிக்கு அவரது நண்பர்கள் அளித்த பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராமேசுவரம் அருகே பாம்பனைச் சேர்ந்த ஏ. ஆண்ஸ்கியூ - ஏ. ப்ரோனோஷாஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாம்பனில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் 1 லிட்டர் பெட்ரோல், 1 லிட்டர் டீசல் ஆகியவற்றை சீதனமாக வழங்கியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை புதுமணத் தம்பதிகளுக்கு எடுத்துரைத்து குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்த வேண்டும் என்பதை விளக்கும் விதமாக மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் இவற்றைப் பரிசாக அளித்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago