தமிழகத்தில் கரோனா 3-வது அலைக்கான அறிகுறி உள்ளதா?- சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா 3-வது அலைக்கான அறிகுறி இல்லை. ஆனால், கரோனா 3-வது அலை வராது என்று கூற முடியாது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6-வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழகத்தில் 50,000 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 1.8 கோடி பேர் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 57 லட்சம் பேர் இதுவரை இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. சிலர் இன்னமும் தனிமைப்படுத்துதலில் கவனக்குறைவாக உள்ளனர்.

ஒரு வீட்டில் கரோனா பாதித்த நபர் இருந்தால் வீட்டில் உள்ள பிறர் வெளியே சுற்றுகின்றனர். நோய் கட்டுப்பாட்டு வழிகளை நாம் பின்பற்றியதால் தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ளது. இதனை மக்கள் உணர வேண்டும்.

பொது சுகாதார வல்லுநர்களின் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கரோனா மூன்றாவது அலை வருவதற்கான அறிகுறி இல்லை. ரஷ்யா, பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற இடங்களில் கரோனா ஏறுமுகமாக இருக்கிறது. எனவே வருங்காலத்தில் கரோனா தொற்றைத் தடுக்க மக்கள் விழா காலங்களில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா மூன்றாவது அலை வராது என்று கூறமுடியாது.

மூன்றாவது அலை வருமோ அல்லது வராதோ என்ற எண்ணத்தை விட்டு கரோனா தொற்றைத் தடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்திய அளவில் 100 கோடி அளவில் கரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில், மீண்டும் மீண்டும் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவது நல்லதல்ல. முகக்கவசம் கரோனாவைத் தடுக்கும் அரண் என்று நாம் உணர வேண்டும். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசியும், முகக்கவசமும் முக்கியம்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்