காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்று (அக்.22) இரவு திருநள்ளாற்றில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் க.தேவமணி (53). திருநள்ளாறு பிரதான சாலை-சுரக்குடி சாலை சந்திப்பு அருகே இவரது வீடு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், திருநள்ளாற்றில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து தேவமணி, தனது ஆதரவாளருடன் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், தேவமணி வீட்டுக்கு அருகில், இருசக்கர வாகனத்தை மறித்து தேவமணியைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் தேவமணியை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி தேவமணி உயிரிழந்தார்.
இதுகுறித்து திருநள்ளாறு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் காரணமாக திருநள்ளாற்றில் பதற்றம் நிலவுவதால் தேவமணி வீடு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேவமணி மீது பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் முன் விரோதம் காரணமாக கூலிப் படையினர் மூலம் தேவமணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago