சாமானியனும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: தகவலறியும் உரிமைச் சட்டத்தால் சுகாதாரத் துறையை சீர்படுத்தும் இளைஞர்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சாமானியர்களாலும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார் மதுரை யைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சி.ஆனந்தராஜ் (35). அதற்காக இவர் எடுத்த ஆயுதம், தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

கடலூர் மாவட்டம், விருதாச் சலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், மதுரையில் வசித்து வருகி றார். சுகாதாரத் துறையை சீர்படுத்த, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல்வேறு பொதுநல வழக்கு களைத் தொடர்ந்து, சட்ட ரீதியாகப் போராடி வருகிறார்.

2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 3 ஆயிரம் பக்கங்களுக்கு தகவல்களை பெற்றுள்ளார். 60-க் கும் மேற்பட்ட பொதுநல வழக்கு களை தொடர்ந்துள்ளார். இவரின் இந்த சட்டப் போராட்டம், தமிழக சுகாதாரத் துறையிலும், அரசு மருத் துவமனைகளிலும் கடந்த 5 ஆண்டு களில் குறிப்பிடத்தகுந்த பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

2013-ம் ஆண்டில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பொம்மன்பட்டியைச் சேர்ந்த மீனாட்சி என்பவரது குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் காணாமல் போனது. மருத்துவமனை நிர்வாக மும், போலீஸாரும் கண்டுகொள்ள வில்லை. தகவலறிந்து அங்கு சென்ற ஆனந்த்ராஜ், குழந்தையை கண்டுபிடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீனாட்சியை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வைத்தார். இந்த வழக்கால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் 43 குழந்தைகள் காணாமல் போன திடுக்கிடும் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

சிபிசிஐடி போலீஸார் துரித விசாரணை மேற்கொண்டதில் பல குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்ட நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தன. இதுவரை கண்டுபிடிக்க முடியாத 14 குழந்தைகளின் பெற் றோர்களுக்கு, உயர் நீதிமன்றம் மூலம் அரசு நிவாரணம் ரூ.24 லட்சம் கிடைத்தது. 2013-ம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் 2 ஆயிரம் குழந்தை கள் இறந்துள்ளதை தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து, மதுரை ராஜாஜி மருத் துவமனையில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டன.

இதுகுறித்து சி.ஆனந்தராஜ் கூறியதாவது:

எனது தந்தை கல்லீரல் பாதிக் கப்பட்டு அரசு மருத்துவமனை கை விட்ட நிலையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். மூட்டை தூக்கி அவர் சம்பாதித்த மொத்த பணம், சொத்துக்களை அவரது சிகிச்சைக்கே விற்று செலவு செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவத் துறை யில், தங்களது உரிமைகளைப் பெறுவதிலும், எனது தந்தையைப் போன்ற எளியவர்கள் சிகிச்சை பெறுவதிலும் இருக்கும் தடை களைக் கண்டுபிடித்து, அவற்றை களையவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த ஆரம்பித்தேன். அதுவே தற்போது முழுநேர வேலையாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் ஏற்படுத்திய மாற்றம்

கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகளை ஆராய, அந்தந்த மாநில அரசுகளிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில தகவல்களை ஆனந்தராஜ் கோரினார். இவரது இந்த நடவடிக்கையால் கேரளா அரசு, உடனே 83 நபர்களைக் கொண்ட பறக்கும்படையை அமைத்து ஒரே நாளில் அம்மாநிலம் முழுவதும் ஆய்வுசெய்து சட்டவிரோதமாக செயல்பட்ட 40 ஸ்கேன் மையங்களைக் கண்டறிந்து ‘சீல்’ வைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்