கொடைக்கானல் போட் கிளப் அலுவலக சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

கொடைக்கானல் போட் கிளப் அலுவலக சீலை அகற்ற உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், போட் கிளப் செயல்படவும், படகு சவாரிக்கும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவித்துள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''கொடைக்கானல் ஏரியில் 8 சென்ட் நிலம் போட் கிளப்பிற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த குத்தகைக் காலம் முடிவடைந்துவிட்டது. கொடைக்கானல் ஏரி கடந்த 2009-ம் ஆண்டில் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் ஏரியை போட் கிளப் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது.

ஏரியில் போட் கிளப் சார்பிலும், தனியார் ஓட்டல் நிறுவனம் சார்பில் படகு சேவை நடத்தப்படுகிறது. இதற்குத் தடை விதித்து ஏரியில் படகுகளை இயக்கப் பொது டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கொடைக்கானல் ஏரியில் போட் கிளப், தனியார் ஓட்டல்கள் சார்பில் படகு சேவை நடத்தத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. போட் கிளப் சார்பில், ''படகு சவாரி நடத்தவும், போட் கிளப் செயல்படவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போட் கிளப் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ''கொடைக்கானல் போட் கிளப் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். போட் கிளப்பைத் திறக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடரும்'' என உத்தரவிட்டு, விசாரணையை அக். 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்