திருப்பத்தூர் அருகே சங்க காலத்தை சேர்ந்த தொல்லியல் சான்றுகள் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே சங்க காலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி தலை மையில் தொல்லியல் அறிஞர் வெங்கடேசன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முனிசாமி, குனிச்சி பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் அருகே கள ஆய்வு மேற்கொண்ட போது சங்க கால வாழ்விடம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி கூறும்போது, "திருப்பத்தூர் - சிங்காரபேட்டை பிரதான சாலை யில் சுமார் 5 கி.மீ., தொலைவில் அனேரி கிராமம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலை சுற்றியுள்ள நிலத்தில் கள ஆய்வு நடத்தினோம். விவசாய உழவுப் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டபோது நிலத்தில் தொடர்ச்சியாக கருப்பு, சிவப்பு வண்ணத்திலான பானை ஓடுகள் அதிக அளவில் இருப்பது காண முடிந்தது.

கீழடி உள்ளிட்ட இடங்களில் இது போன்ற கருப்பு, சிவப்பு வண்ணத்தில் பானை ஓடுகள் ஏராளமாக கண்டறிந்து அதன் பிறகே அங்கு அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

தமிழகத்தில் கீழடி சிறந்த தொல்லியல் ஆய்வு இடம் என்றாலும், கொடுமணல், ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகன் குளம் போன்ற ஏராள மான இடங்கள் மாநிலம் முழுவதும் பல தொல்லியல் சான்றுகளை கொண்டுள்ளது.

கடந்த 1964-65-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பைனம்பள்ளி என்ற இடத்தில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை தொல்லியல் ஆய்வு மெய்ப்பித்துள்ளது. அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமத்திலும் தொல்லியல் தடயங்கள் தன்ன கத்தே கொண்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொதுவாக, சங்க கால வாழ்விடங்கள் நீர்நிலைகள் சார்ந்த பகுதிகளிலேயே கட்டமைக்கப்பட்டன. அனேரி கிராமத்தையும் அகழிபோல நீரோடை ஒன்று சூழ்ந்துள்ளது. ஏலகிரி மலையில் உள்ள ஜலகம்பாறை உள்ளிட்ட நீர்நிலைகள் திருப்பத் தூர் பெரிய ஏரியில் கலக்கிறது.

திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் அனேரி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு சென்றடைகிறது. எனவே, அனேரி ஊர் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான நீர்நிலை சூழ்ந்த ஊராக அனேரி கிராமம் உள்ளது. இந்த ஊரில் சங்ககால மக்கள் வாழ்ந்திருக்க அதிக வாய்ப்புள் ளதை எங்கள் கள ஆய்வு மூலம் கண்டு உணர்ந்துள்ளோம்.

அனேரி நிலப்பகுதியில் கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட பானை ஓடுகள் மட்டும் அல்லாமல் உடைந்த நிலையில் முழுமையான நிலையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கற்களும், மண்ணில் பல ஆண்டு களாக புதைந்துள்ளன.

இந்த செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் சங்க கால மக்கள் குடியிருந்துள் ளனர் என்பதை அறிய முடிகிறது. இரும்பை உருக்கி வார்த்ததற்கான அடையாளமாக இரும்பு சுடுகல்(சுட்டாங் கற்கள்),பல இப்பகுதி யில் கண்டெடுத்துள்ளோம்.

இவை அனைத்தும் சங்க காலத்தைச்சேர்ந்த பொருட்கள் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அனேரி கிராமத்தில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் பல வரலாற்று சிறப்பு மிக்க செய்திகள் தெரியவரும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்