புதுச்சேரியில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (அக். 20)வெளியிட்ட தகவலில் கூறியுள்ளதாவது:
''புதுச்சேரி மாநிலத்தில் 4,065 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 34, காரைக்காலில் 3, மாஹேவில் 5 பேர் என மொத்தம் 42 பேருக்கு (1.03 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 94 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 367 பேரும் என 461 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
» கோயில் அர்ச்சகர்கள் நியமனம்; இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டது: உயர் நீதிமன்றம்
» டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மேலும் புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,852 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 71 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 208 (98.19 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 84 ஆயிரத்து 545 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.''
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago