பெண் எஸ்.பிக்கு கூடுதல் டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கக் கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. டி.கண்ணன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண் எஸ்.பிக்கு கூடுதல் டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து, தன்னை விடுவிக்கக் கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. டி.கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் .
அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் இன்று (அக். 20) விசாரணைக்கு வந்தபோது, கண்ணன் தரப்பில் கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின்படியே தான் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நீதிபதி வேல்முருகன் குறுக்கிட்டு, பெண் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டுமெனவும், உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
» தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» டெங்கு பரவல் தடுப்பு: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் என, கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. கீழமை நீதிமன்ற விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago