ராமநாதபுரம் மாவட்டத்தில் தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதியை தொடர்ந்து, வடக்கே பாக் ஜலசந்தி கடல் நீரும் பச்சையாக மாறி சிறிய ரக மீன்கள் இறந்து கரை ஒதுங்கத் தொடங்கி உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், தெற்கே மன்னார் வளைகுடா கடலில் கடந்த வாரம் பாம்பன் முதல் கீழக்கரை வரையிலான பகுதியில் நீரோட்டத்தால் பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் கரை ஒதுங்கின. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்நீர் பச்சை நிறத்தில் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பாலூட்டி இனங்களான 2 டால்பின்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.
வடக்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியை தொடர்ந்து தெற்கே பாக் ஜலசந்தி கடல் நீரின் நிறமும் பச்சையாக மாறி ராமேசுவரம் அருகே வில்லூண்டி தீர்த்தம் பகுதியில் நேற்று சிறிய ரக மீன்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின. 2019-ம் ஆண்டு செப்டம்பரில், மன்னார் வளைகுடா பகுதியில் 'நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்' எனும் ‘பூங்கோரை' பாசிகள் பெருமளவில் படர்ந்ததால் மீன்களின் செதில்கள் அடைபட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து, மன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கின. ஆனால், தற்போது ராமநாதபுரம் மாவட் டத்தில் தெற்கே பாக் ஜலசந்தி கடற்பகுதியிலும் மீன்கள் இறந்து மிதப்பதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மண்டபம் கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது: செப்டம்பர், அக்டோ பரில் அதிக ளவில் உற்பத்தியாகும் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ என்ற பூங்கோரை கடற்பாசியால் கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மன்னார் வளைகுடா கடற்பகுதியிலிருந்து பாம்பன் கடல் வழியாக பாக் ஜலசந்தி கடற்பகுதியிலும் இந்த பாசிகள் தற்போது நீரோட்டத்தால் பரவி வருகின்றன. கடல் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பிவிடும். மீனவர்கள் அச்சமடைய வேண்டாம் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago