பெருங்குளத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்: சரணாலயமாக அறிவிக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. இதனை இப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். ஆண்டுதோறும் வரும் பறவைகளைப் பாதுகாக்க, பெருங்குளத்தை பறவைகள் சரணாலயமாக அல்லது பறவைகள் வாழ்விடமாக அறிவித்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பறவைகள் ஆர்வலர்களும், இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மருதூர் கீழக்கால் பாசனத்தில் கடைசியாக அமைந்துள்ள குளம் பெருங்குளம். பெருங்குளம் பேரூராட்சி மற்றும் சிவகளை ஊர்களுக்கு இடையே 857 ஏக்கர் பரப்பளவில் இக்குளம் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் காணப்படும். மேலும், குளத்தை சுற்றிலும் புதர்கள், சகதி நிறைந்து மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடமாக இருப்பதால் நீர்வாழ் பறவைகளுக்கு சொர்க்கப் பூமியாக இக்குளம் அமைந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த குளத்தை நோக்கி வெளிநாட்டு பறவைகள் படையெடுத்து வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 5,000 வெளிநாட்டு பறவைகள் பெருங்குளத்துக்கு வந்து செல்வதாக பறவை ஆய்வாளர்கள் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

வழக்கம் போல இந்த ஆண்டும், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள்இங்கு வந்துள்ளன. நாரை வகைகள், நாமத்தலைவாத்து, வரித்தலை வாத்து, நீலச்சிறகு வாத்து,தட்டை வாயன், கரண்டி வாயன், தைலான் குருவி,எகிப்து பினந்தின்னி கழுகு, பிளமிங்கோ, உல்லான்கள் உள்ளிட்ட ஏராளமான அரிய வகைவெளிநாட்டுப் பறவைகள் இங்கு காணப்படு கின்றன.

96 பறவை இனங்கள் வருகை

இப்பகுதியில் பறவைகள் குறித்து ஆய்வு செய்து வரும் இறகுகள் அமிர்தா இயற்கை அறக்கட்டளை நிறுவனர் என்.ரவீந்திரன் கூறியதாவது: இப்பகுதி நீர் வளம் மிகுந்தது. 96 பறவை இனங்கள் இந்த நீர் நிலையை ஆதாரமாக தேடி வருகின்றன. இந்திய அளவில் மிகவும் அரிதான எகிப்து கழுகுகள் இங்கு காணப்படுகின்றன. இப்பகுதி மக்களும் ஒருங்கிணைந்து இந்த பகுதியை பாதுகாக்க வேண்டும். மாசு ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் இந்த நீர் நிலை இன்னும் பல தலை முறைக்கு நன்றாக இருக்கும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்