அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
அதன்படி. வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
» உடல்நலக் குறைவால் மகன் மரணம்: இறுதிச் சடங்கில் தந்தையும் உயிரிழப்பு
» போலீஸ்காரரை மதுபோதையில் தாக்கியவர் கைது: மாவுகட்டுடன் மன்னிப்பு கேட்கும் விடியோ வெளியானது
தேனி மாவட்டத்திற்கு கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago