உடல்நலக் குறைவால் மகன் மரணம்: இறுதிச் சடங்கில் தந்தையும் உயிரிழப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் உடல்நலக் குறைவால் மகன் உயிரிழந்த நிலையில் தந்தையும் மகனின் இறுதிச் சடங்கின் போது உயிரிழந்தார்.

புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி (55). இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ராஜன் (28) என்கிற மகனும் உள்ளனர்.

பெரியசாமி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்,

இதற்கிடையே கடந்த வாரம் ராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அப்போது அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17ம் தேதி) ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் அவரின் தந்தை பெரியசாமி, தாயார் விஜயா மற்றும் உறவினர்கள் துக்கத்தில் இருந்து வந்த நிலையில் ராஜனின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (18ம்தேதி) வீட்டில் நடந்தது. அப்போது திடீரென பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பெரியசாமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்,

மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்