தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் தளர்வு குறித்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மத்தியக் குழுவினர் இன்று மதியம் (19-ம் தேதி) ஆய்வு செய்தனர்.
டெல்டா மாவட்டங்களில், சுமார் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படுகிறது.
மத்திய அரசின் விதிப்படி நேரடி கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால், விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும், தொடர்ந்து மழை பெய்வதால் நெல் காய்வதில் சிக்கல் ஏற்படுவதால், ஈரப்பதத்தில் 22 சதவீதம் வரை தளர்வு அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்தது. இதன் பேரில் இந்திய உணவுக் கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தென்மண்டலத் துணை இயக்குநர் எம்.இசட்.கான் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் பி.பிரபாகரன், சி.யூனுஸ் உள்ளிட்ட மத்தியக் குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவையாறு அருகே அரசூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் நெல் குவியலிலிருந்து மாதிரிகள் சேகரித்தனர். மேலும் ஈரப்பதம் அளவிடும் கருவியில் மாதிரியை வைத்து ஆய்வு செய்தனர். மேலும் சிறிதளவு நெல்லை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் துணை இயக்குநர் கான் கூறுகையில்: ”தற்போது நெல்லில் ஈரப்பதம் தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் அளிக்க உள்ளோம். அதன் பிறகு மத்திய அரசு முடிவு செய்யும்” என்றார்.
இவர்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இணை மேலாண் இயக்குநர் சங்கீதா, தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் என்.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 secs ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago