தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 19) தன் ட்விட்டர் பக்கத்தில், "வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை சிங்களக் கடற்படைக் கப்பல் மோதிக் கவிழ்த்துள்ளது. அதில், மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார். சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது!
சிங்களப் படைத் தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க அரசு முன்வர வேண்டும்!
தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். சிங்களக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.
» அந்த ஊழியரின் நடத்தைக்கு வருந்துகிறோம்; பணி நீக்கம் செய்துள்ளோம்: சொமேட்டோ நிறுவனம் விளக்கம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago