இலங்கை தமிழர்களுக்காக அவ் வப்போது குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகள், இல ங்கை அகதிகளுக்கு இந்தியக் குடி யுரிமையை பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என மதுரை அருகே அகதி ஒருவர் தற்கொலை செய்த உச்சபட்டி முகாமில் ஆய்வுசெய்த உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 6-ம் தேதி ரவீந்திரன் என்ற அகதி, மின் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்தார். இவரது மரணம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சாந்தா, மதுரை கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் எஸ். தினகரன், குழு அமைப்பாளர் ஆர். முரளி, ரபீக்ராஜா, அருண், ஹரிபிரசாத், மதிவாணன் ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவினர் நேற்று முகாமில் ஆய்வு செய்தனர்.
இது குறித்து அவர்கள் நேற்று கூறியதாவது:
உச்சபட்டி முகாமில் 600 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த முகாமில் வசித்த அகதி ரவீந்திரன், எனது மரணம் அகதிகளுக்கான விடுதலை எனக் கூறி தற்கொலை செய்த விதம் அதிர்ச்சிகரமான சம்ப வம்.
சிறைகளில் கைதிகள் சோதிக்கப் படுவதுபோல முகாம்களில் அகதி கள் சோதிக்கப்படுகின்றனர். சோதனையில் வராத முகாமை சேர்ந்த 6 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் நீக்கி யுள்ளனர். ஒருவரை பதிவேட்டிலிருந்து நீக்கிவிட்டால், அவர் சட்டத்துக்குப் புறம்பாக தங்கும் வெளிநாட்டுப் பிரஜையாகக் கருதப்படுவார். அவ ர்கள் மீது குற்றங்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
சம்பவத்தன்று ரவீந்திரன் மகன் பிரதீபன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளதால் சோதனைக்கு அழைத்து வரவில்லை. மருத்துவர்கள் ரவீந்திரனின் போனில் பேசியும், ஆய்வுக்கு வந்த வருவாய்த் துறை ஆய்வாளர் துரைப்பாண்டி சிறுவனைக் காட்டும்படி கூறியுள்ளார். இதனால், மன வேதனை அடைந்த ரவீந்திரன் தற்கொலை செய்துள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகை போது மானதாக இல்லை. படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெறத் தடையாக அகதி என்ற அடைமொழி உள்ளது. அதனால், கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர். தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும்.
அகதிகள் முகாமில் தெருவிளக்கு எரியவில்லை. சாலைகள் இல்லை. உளவுத்துறை கண்காணிப்பு, மிரட்டல் களும் அவர்களை அச்சுறுத்துகிறது. சொத்துரிமை இல்லாததால் சம்பாதி ப்பதை கேளிக்கைகளில் மட்டும் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளாகிய நிலையில், அவர்களை முகாம்களில் வைப்பது தேவையற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்துள்ள அகதிகளின் பிள்ளைகள் இந்தியாவை தாய் நாடாகவே கருதுகின்றனர். எனவே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
இலங்கை தமிழர் உரிமை பற்றி பேசும் அரசியல் கட்சிகள், அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும். அகதிகளுக்கான ரோல் கால், சிறப்பு விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனத் தெரிவித்தனர்.
சிகிச்சைக்கு ஏங்கும் அகதியின் மகன்
உண்மை கண்டறியும் குழுவினர் மேலும் கூறியதாவது:
ரவீந்திரனுக்கு செவித்திறன் குறைவு. அவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் பிரதீபனுக்கு(13), ஹீமோபீலியா எனும் ரத்த ஒழுகல் நோய் உள்ளது. இந்த நோய்க்கு விலை உயர்ந்த ஊசியை (சுமார் ரூ.12 ஆயிரம்) வாரம்தோறும் போட வேண்டும். இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரதீபன் தொடர்ந்து பல ஆண்டாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இம்மாதிரியான ரத்த ஒழுகல் நோய், இறந்துபோன ரவீந்திரனின் மகள் வயிற்று பேரனுக்கும் தற்போது உள்ளது. ரவீந்திரன்தான், அவரது குடும்பத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்தவர். அதனால், அவரது மகனின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago