பெட்ரோல் விலை ரூ.150ஐ தொடும் நிலையை மோடி உருவாக்குவார்: நாராயணசாமி சாடல்

By செ.ஞானபிரகாஷ்

ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூ. 150ஐ தொடும் நிலையை மோடி உருவாக்குவார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார். புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று இரவு வெளியிட்ட வாட்ஸ் அப் விடியோவில் கூறியிருப்பதாவது:

"பெட்ரோல் விலை ரூ. 100 தொடும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். அதைபோல் தற்போது நிலை உருவாகியுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பெட்ரோல் ரூ.150, கேஸ் ரூ.1250, டீசல் ரூ.140 ஆகிவிடும். மக்கள் மோடி அரசை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் 150ஐ தாண்டுவதை மோடி உருவாக்குவார்.

பிரசார் பாரதி அமைப்பானது அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், வரலாற்றின் சாட்சியங்கள் என்ற ஆவணங்களை பெட்டகத்தில் வைத்துள்ளனர். அதை வெளியில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கிறார்கள். இது இமாலய தவறு.

சட்டப்பேரவை முடிந்து இரண்டு மாதங்களாகியும் எக்கோப்பும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை. பாப்ஸ்கோ தீபாவளி பஜார் எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை. நிதியை கையில் வைத்திருந்து அறிவித்திருக்கவேண்டும். புதுச்சேரி அரசு ஸ்தம்பித்துள்ளது. நிதியில்லாததுடன் வருவாயை பெருக்கவில்லை.

ஜிஎஸ்டி ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்து விடும். இழப்பீடு அதன்பிறகு கிடைக்காது. 1250 கோடி ரூபாய் வரவேண்டிய நிதி கிடைக்காமல் போவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் வந்துள்ளதால் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கருத்து உண்மையில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தடை ஏதும் இல்லை.

மக்களை மாநில அரசு ஏமாற்றக்கூடாது. பஞ்சாலைகளை திறக்க ஆயத்தவேலையே நடக்கவில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் முதல்வரால் எடுக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எந்தவேலையும் நடக்கவில்லை.

தேர்தல் ஆணையருக்கு தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. நீதிமன்ற தடை இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்கவேண்டும். இதில் , சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், தேர்தல் ஆணையரை சந்தித்துள்ளார். அதற்கு அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்