பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி தான் எழுதிய கடிதத்தை ஏற்று தடையை நீக்கியுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நான் நன்றியை உரித்தாக்குகிறேன். பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி தான் எழுதிய கடிதத்தின் மீது துரிதமாக உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். உங்களின் கனிவான நடவடிக்கை பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஒளியேர்ரி வைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
4 மாநில முதல்வர்களுக்கு கடிதம்:
முன்னதாக, பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடையை மறுபரிசீலனை செய்து, தமிழக பட்டாசுகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலமுதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
» சிங்கங்கள் மீண்டும் கர்ஜித்துள்ளன: சிஎஸ்கேவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
» புதுச்சேரியில் தீபாவளி கைத்தறி கண்காட்சி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
இதுகுறித்து நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்றால் நாட்டில் உள்ள குறு சிறு,நடுத்தரத் தொழில்கள் துறைகடுமையாக பலவீனமடைந் துள்ளன. இந்த தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை நம்பியே தமிழகத்தின் பொருளாதாரம் உள்ளது. தமிழகத்தில் குறு சிறு, நடுத்தரத்தொழில் துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் எனது தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. மாநிலத்தின் முக்கியமான தொழில்சார்ந்த நடவடிக்கையில் ஒன்றாகவும் இது உள்ளது. இத்தொழில் மூலம் 8 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இந்தாண்டு தீபாவளி காலத்தில் பட்டாசு விற்பனைக்கு உங்கள்மாநிலத்தில் தடை விதிக்கப்பட் டுள்ளதாக என் கவனத்துக்கு வந்துள்ளது. காற்று மாசு காரணமாகவே பட்டாசுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சில பட்டாசு வகைகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது தாங்கள் அறிந்ததே. இவற்றுக்குப் பதில் மிகக் குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கும் தடை விதித்துள்ளது ஏற்புடையது கிடையாது.
இதுபோன்ற தடைகள், மற்ற எந்த நாட்டிலும் இல்லை. பசுமை பட்டாசுகளுக்கு மற்ற மாநிலங்களும் தடை விதித்தால், 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் பட்டாசு உற்பத்தி ஆலைகளை மூடும் சூழல் ஏற்படும். பட்டாசு வெடிப்பது தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதியாகும். சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை சரிசமமாக கருதுவது அவசியமானதாகும்.
அதேநேரம் உச்ச நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியன குறிப்பிட்டுள்ள வரை யறைப்படி தயாரித்துள்ள பட்டா சுகளை அனுமதிக்க வேண்டும். பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தன் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago