சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி: தனியார் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக அரசு மே மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சென்னை மாநகரக் காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (அக். 14) வழக்கம் போல காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னுடைய பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த காவல் அதிகாரிகள் சங்கர் ஜிவாலைக் காவல் ஆணையரின் சொந்த வாகனத்திலேயே அழைத்துச் சென்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்