நிலைத்தடுமாறி பள்ளத்தில் இறங்கி பாறையில் மோதிய கார்: 2 பேர் உயிரிழப்பு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் இறங்கி பாறையில் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் சிவராஜா (48). நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் அதிபர். இவருடன் தொழில் செய்யும் டெல்லி என்பவருன் (45) காரில் இன்று (அக். 12ம் தேதி) திண்டுக்கல் சென்றுள்ளனர். அங்கிருந்த மனோகரன் என்பவரை (50) கரூர் அழைத்து வந்து அவர்களது வேலைகளை முடித்த பிறகு மனோகரனை திண்டுக்கல்லில் விடுவதற்காக மீண்டும் திண்டுக்கல்லுக்கு காரில் சென்றுள்னர். காரை சிவராஜா ஓட்டி சென்றுள்ளார்.


கரூர், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில அரவக்குறிச்சி அருகேயுள்ள பொன்னாகவுண்டனூர் பிரிவு சாலை அருகே செல்லும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுற பள்ளத்தில் இறங்கி, பாறையில் மோதியது. இதில் சிவராஜா, மனோகரன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த டெல்லி கரூரில் உள்ள தனியார் மருத்துமவனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்