பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி வழக்கு: கடலூர் எம்.பி.யிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

By ந.முருகவேல்

பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி வழக்கு தொடர்பாக கடலூர் எம்.பி.யிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்து வந்தவர் கோவிந்தராஜ் (55. இவர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை கடலூர் மக்களவை உறுப்பினரும், ஆலையின் உரிமையாளருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், கோவிந்தராஜ் செப்டம்பர் 20-ம் தேதி உயிரிழந்தார் எனக் கூறி, அவரது இறப்புக்கு கடலூர் எம்பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி, எம்பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் மற்றும் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து டி.வி.ஆர்.எஸ். ரமேஷ் தவிர 5 பேரை கைதுசெய்தனர்.

கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், எம்பி ரமேஷூம் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது.

இது தொடர்பாக இவ்வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது, எம்.பி. ரமேஷிடம் தொடர் விசாரணை நடத்திவருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்