தேனியில் வனத்துறை தடை, தேர்தல் நடத்தை விதிகளால் அழிவின் விளிம்பில் மூங்கில் பின்னல் தொழில்

By ஆர்.செளந்தர்

வனத்துறை தடை மற்றும் தேர்தல் விதிமுறைகளின் காரணமாக மூங்கில் பின்னல் தொழில் அழிவின் விளிம்பில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஏராளமானோர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காய்கறி மற்றும் பழங்களை மூங்கில் கூடைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பினர். விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கோழிகளை பஞ்சாரம் என்றழைக்கப்படும் பெரிய மூங்கில் கூடைகளில் அடைத்து வைத்தனர்.

தேர்தல் காலங்களில் பிரச்சாரத்தின்போது, கட்சிகளின் சின்னங்கள் மற்றும் தலைவர்களின் உருவங்களை மூங்கிலால் செய்து முக்கிய இடங்களில் வைத்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பர்.

இதனால் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினரிடையே மூங்கில் பின்னல் தொழிலாளர்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. கடந்த காலங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே கட்சிக்காரர்கள் மூங்கில் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து விடுவர். இந்த நிலையில், பிளாஸ்டிக் கூடைகளின் வருகையால் மூங்கில் கூடைகளுக்கு வரவேற்பு குறையத் தொடங்கியது.

இதற்கிடையே, தற்போது தேர்தல் விதிமுறைகளால் கட்சி வேட்பாளர்களின் செலவுக் கணக்கு மற்றும் வனத்துறையினரின் தடை காரணமாக மூங்கில் பின்னல் தொழில் அழிவின் விளம்பில் உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் மூங்கில் பின்னும் தொழிலாளி பழனியம்மாள் கூறியதாவது: பல ஆண்டுகளாக வனப்பகுதியில் வளர்ந்து வந்த மூங்கில் மரங்களை வெட்டி, அதன் மூலம் மூங்கில் கூடை, திருவிழாக்களில் மின் அலங்கார வளைவுகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவங்கள் மட்டும் இல்லாமல் திருமணத்தின்போது மணமக்கள் அமர அலங்கார மேடைகளை அமைத்து வந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, வனப்பகுதியில் மூங்கில் மரங்களை வெட்ட வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், கேரள மாநிலம் கட்டப்பனை பகுதியில் இருந்து மூங்கில்களை விலைக்கு வாங்கி வந்து, அதனை பிளந்து கூடைகளை பின்னி விற்பனை செய்து வருகிறோம்.

12 அடி கொண்ட 20 மூங்கில்கள் ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி சிறிய, பெரிய 5 கூடைகளை செய்ய முடியும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 7 கூடைகள் வரை பின்ன முடியும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நம்பி சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர்.

வனப்பகுதியில் மூங்கில் வெட்டத் தடை, பிளாஸ்டிக் கூடைகளின் வருகை, அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூங்கில் பின்னல் தொழில் நசிவடைந்ததோடு ஏராளமானோர் வேலையிழந்து விட்டனர். தற்போது தேனி, பெரியகுளம், போடி, கூடலூர் பகுதிகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே இத்தொழிலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். பலர் வேறு தொழில்களுக்குச் சென்று விட்டதால் மூங்கில் பின்னல் தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது என்றார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்