திமுக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நடிகர் வடிவேலுவுக்கு மறுபக்கம் அதிமுகவினர் தூது விட்டுள்ளனர். ஆனால், ‘இனிமேல் அரசியலே வேண்டாம்’ என்ற முடிவுக்கு வடிவேலு வந்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நடிகர் வடிவேலு. அவருடைய காமெடியான பிரச்சாரத்தை அனைவரும் ரசித்தனர். ஆனாலும், தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது.
திமுகவுக்கு ஆதரவான பிரச்சாரம் என்றாலும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜயகாந்தைதான் கடுமையாக சாடினார் வடிவேலு. இதனால், அவரது அலுவலகத்தில் தேமுதிகவினர் கல் எறிந்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். இரு தரப்பிலும் மோதல், புகார் என்று பரபரப்பானது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வடிவேலு எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. நெருக்கமான நண்பர்களை மட்டுமே சந்திப்பது என தன் நட்பு வட்டத்தை மிகவும் சுருக்கிக் கொண்டார். மேலும், ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களில் காமெடி நாயகனாக நடித்தார். இரண்டுமே பெரும் தோல்வியை சந்தித்தன.
‘எலி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘‘அரசியல் கடையை தற்போது மூடி வைத்திருக்கிறேண்ணே.. அதை எப்போது வேண்டுமானாலும் திறக்கலாமே’’ என்று வடிவேலு கூறினார்.
தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தேர்தலில் வடிவேலு என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு உள்ளது. ஆனால், இனிமேல் அரசியல் வேண்டாம் என்று வடிவேலு முடிவெடுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறும்போது, ‘‘இனி அரசியலே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார் அண்ணன் வடிவேலு. திமுகவினர் விஜயகாந்திடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்ததில் இருந்தே அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். இதற்காகவா இப்படி பிரச்சாரம் பண்ணினோம் என்று வருத்தப்பட்டார். அதிமுகவினர்கூட 3 முறை வெவ்வேறு வழியாக அவரிடம் பிரச்சாரம் செய்யச் சொல்லி அழைப்பு விடுத்தனர். நீங்கள் அழைத்ததற்கு ரொம்ப நன்றி.. ஆனால் இப்போது எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். நடிப்பில் மட்டுமே முழுவீச்சில் கவனம் செலுத்துகிறார். நாயகன், காமெடி என அனைத்திலும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார். விரைவில் எத்தனை பட அறிவிப்பு வருகிறது என்று மட்டும் பாருங்கள்’’ என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago