முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருப்பூர் கருமாரம்பாளையத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி (47). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவிதுர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், 1 வயதில் மகன் உள்ளனர். சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியின் தங்கை பத்மினியின் மருமகன் ஆவார்.
சிவமூர்த்தி கடந்த 2018-ம்ஆண்டு ஜூன் 25-ம் தேதி கோவைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, தனது சொகுசுகாரில் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய 3 அலைபேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அவரது தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர்.
ஜூன் 27-ம் தேதி வெங்கிளி என்ற இடத்தில், வாகனச் சோதனைநடத்தியபோது, அந்த வழியாக வந்த சிவமூர்த்தியின் காரை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த3 பேரை பிடித்து விசாரித்ததில், ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் சிவமூர்த்தியை கடத்திச்சென்று கழுத்தை நெரித்து கொலைசெய்ததும், பிணத்தை 2 நாட்களாக காரிலேயே வைத்து சுற்றிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் கல்லைக் கட்டி வீசிச்சென்றதும் தெரியவந்தது.
சிவமூர்த்தியை கொலை செய்தவர்கள் கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த விமல்(35), கவுதமன் (22), மணிகண்டன்(எ) மணிபாரதி (22) என்பதுதெரியவந்தது. கெலவரப்பள்ளிஅணையில் இருந்து சிவமூர்த்தியின் உடலை போலீஸார் மீட்டனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி(35) என்பவரை திருப்பூர் போலீஸார் காரமடையில் கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், விமல், மூர்த்தி, மணிகண்டன்(எ) மணிபாரதி, மூர்த்தி ஆகியோருக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம், கடத்தல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1000 அபராதம், பணம்கேட்டு மிரட்டியதற்கு 10 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், தடயங்களை அழித்ததற்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து நால்வரும்கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago