டெய்லரிடம் ரூ. 10 லட்சம் பறித்த வழக்கில் ஆய்வாளர் வசந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை இளையான் குடி டெய்லரிடம் ரூ. 10 லட்சம் பறித்த வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் வசந்தி ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று (அக். 08) விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், "காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர், நேற்று முன்தினம் விசாரணைக்காக ஆஜரானார். தற்போது வரை ஓரளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார். இவை தவிர, வசந்தியின் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன" என, தெரிவிக்கப்பட்டது.
» ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு செய்தவர் கைது: சிறையில் அடைப்பு
» புதுச்சேரி, காரைக்கால் நகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு: மாற்றியமைக்க திமுக வலியுறுத்தல்
இதைத் தொடர்ந்து 30 நாட்கள் தினமும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடவேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் வசந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றாலோ, சாட்சிகளை கலைக்க முயன்றாலோ, அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரலாம் எனவும், நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago