டெல்லி பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நியமனம் கவலையளிப்பதாக கிரண்பேடி விமர்சனம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நியமனம் செய்யப்பட்டிருப்பது கவலையளிப்பதாக முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ், அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமானவர். அதனால் கிரண்பேடிக்கும், மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையில் மோதல் அடிக்கடி ஏற்படும்.

எம்எல்ஏவாக 25 ஆண்டுகள் மல்லாடி கிருஷ்ணாராவ் பணிபுரிந்ததாகக் குறிப்பிட்டு பாராட்டு விழா நடந்தது. ஆனால், அவர் 25 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று நேரடியாக கிரண்பேடி விமர்சித்து குற்றம் சாட்டியது வரை இம்மோதல் நீடித்தது.

கடந்த ஆட்சியில் இறுதியில் பதவியை ராஜிநாமா செய்த மல்லாடி கிருஷ்ணாராவ், என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். வழக்கமாக அவர் போட்டியிடும் ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை போட்டியிட வைத்தார். ஆனால் ரங்கசாமி தோற்றார். அதையடுத்து மாநிலங்களவை எம்பி பதவியை மல்லாடிக்கு தர முயற்சித்தும் நடக்கவில்லை. இந்நிலையில் டெல்லி பிரதிநிதியாக மல்லாடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை பகிர்ந்துள்ள முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "இந்த நியமனம் ஏமாற்றமளிக்கிறது. வருந்தத்தக்கது. மிகவும் கவலை அளிக்கிறது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்