மதுரையில் சில தனியார் மருத்துவ மனைகளில் கரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு ஐசிஎம்ஆர் அங்கீகாரம் இல்லாத ‘கார்டு டெஸ்ட்' எனப்படும் ஆன்டிஜன் பரிசோதனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் தற்போது 313 கரோனா நோயாளிகள் சிகிச் சையில் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20-க்கு கீழ் இருந்தது. ஆனால், தற்போது தினமும் 30 பேர் தொற் றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக் காதது, முகக்கவசம் அணியாதது போன்றவையே முக்கியக் காரணங்களாக உள்ளன.
அதோடு, சில தனியார் மருத்துவமனைகளில் அங்கீகாரமில்லாத கரோனா பரிசோதனை செய்வதால், உண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு நெகட்டிவ் என பரிசோதனை முடிவுகள் வந்து பொதுவெளியில் நடமாடுவதும் முக்கியக் காரணம் என அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத் துவர்கள் சிலர் கூறியதாவது: கரோனா பரிசோதனைக்கு மத் திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் என்ஏபிஎல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஆர்டி பிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் விதிமுறை. இந்தப் பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் பரிசோதனை மையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூ லிக்கின்றனர். மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் என்ஏபிஎல் அங்கீகாரம் இல் லாத 'கார்டு டெஸ்ட்' எனப்படும் ஆன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்கின்றனர்.
இவற்றின் பரிசோதனை முடிவுகள் 50 சதவீதம் கூட நம்பகத்தன்மை இல்லாதவை என்று கூறினர்.
மருத்துவத் துறை உயர் அதி காரி ஒருவரிடம் கேட்டபோது, "எங்களுக்கு அப்படி எந்தப் புகாரும் வரவில்லை. கேரளா உள்பட சில மாநிலங்களில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்கின் றனர். ஆனால், தமிழகத்தில் செய்வதில்லை. அவ்வாறு பரி சோதனை செய்யப்பட்டால் விசா ரித்து நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago