நீலகிரியில் உலவும் புலியைக் கொல்ல வேண்டாம்: வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

By ஆர்.பாலசரவணக்குமார்

நீலகிரியில் உலவும் புலியைக் கொல்ல வேண்டாம் என, சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரைக் கொன்ற புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடிப் பிடிக்க தலைமை முதன்மை வன உயிரினப் பாதுகாவலர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்தியக் கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் அவசர வழக்குத் தொடர்ந்தனர்.

குறிப்பிட்ட அந்தப் புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (அக். 05) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் எம்.டி.டி. 23 புலியை ஆட்கொல்லிப் புலியாகக் கருதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துவிட்டு, பின்னர் புலியைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது

வனத்துறை தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, புலியைக் கொல்லும் திட்டம் இல்லை என்றும், அதை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். அதன் கழுத்தில் ஏற்கெனவே காயம் உள்ளது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், அந்தப் புலி ஆட்கொல்லிப் புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாகக் கொல்ல முயல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

புலியின் நடவடிக்கையைக் கண்காணித்து, அதைப் பிடித்த பிறகு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதைப் பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

புலியைப் பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கையைக் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்