புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பதிவாளராகப் பணியாற்றியவரை சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத் தரவரிசை மோசமாகச் சரிந்துள்ளதற்கு பதிவாளர், நிதி அதிகாரி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர், நூலகர் உட்பட 28 முக்கியப் பணியிடங்களைப் பல ஆண்டுகளாக நிரப்பாததுதான் காரணம். முக்கியமாகப் பதிவாளர் பதவிக்கு நேர்காணல் நடத்தக் கோரி குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர் நலச்சங்கத்தினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகம் பதில் மனுவை நவம்பர் 5-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்காலிகப் பதிவாளராக இருந்த சித்ராவைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏனெனில் அவர் பேராசிரியராகப் பணிபுரியாமல் கல்லூரி முதல்வராக முடியாது என்று குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங்கிடம் மனுவும் தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் அன்பழகன், சுதந்திரமான மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் ஆகியோர் கூறியதாவது:
» எஸ்சி, எஸ்டி கல்வி உதவித்தொகை திட்டச் செயலாக்கம்: தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம்
» அரசுக் கல்லூரிகளில் எம்.எட். படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
"20.2.2019 அன்று பதிவாளர் (பொறுப்பு) பதவியில் சித்ராவை நியமித்தது சட்டவிரோதம் எனத் தெரிவித்திருந்தோம். பல்கலைக்கழகம் தெரிவித்திருந்த கல்வித் தகுதி, பணி அனுபவம், தேவையான சதவிகித மதிப்பெண் ஆகியவை அவருக்கு இல்லை. இதையடுத்து இந்திய தணிக்கைக்குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது.
ஆனால், இரு ஆண்டுகள் ஆகியும் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய தணிக்கைக் குழு அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கத் துணைவேந்தர் தயக்கம் காட்டுகிறார். இந்த நிலையில் பல்கலைக்கழகத் தற்காலிகப் பதிவாளர் டாக்டர் சித்ரா, கடந்த அக்டோபர் 1-ம் தேதி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது.
பேராசிரியராகப் பணிபுரிந்தவர் மட்டுமே சமுதாயக் கல்லூரி முதல்வராக முடியும். அத்துடன் பிஎச்டி பட்டம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்தது 15 ஆண்டுகள் கற்பித்திருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவில் 10 ஆராய்ச்சி வெளியீடுகளை வெளியிட்டு இருக்கவேண்டும். குறைந்தபட்சம் 110 ஆராய்ச்சி மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சித்ராவுக்கு இத்தகுதிகள் இல்லை. இந்நியமனம் சட்டவிரோதமானது.
பொறுப்பு பதிவாளர் பதவியில் இருந்து சித்ராவை நீக்கிவிட்டு, பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமித்திருப்பது துணைவேந்தரின் தவறான நடவடிக்கையாகும். மத்திய அரசின் விதிகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது .
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சீரான செயல்பாட்டைப் பாதுகாப்பதற்காக, சட்டரீதியான பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு நீதிமன்றத்தில் முறையிடுவோம்."
இவ்வாறு பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர் நலச்சங்கம் பொதுச் செயலர், சுதந்திரமான மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago