தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலராகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், அதன்பின் 10 ஆண்டுகளில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.
இவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் 6 மாதம் போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளி த்து, எஸ்ஐயாக பணிபுரிய அனு மதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சிலர் பயிற்சி முடிப் பதற்குள்ளேயே பணி ஓய்வு பெறுகின்றனர். பயிற்சிக்குப் பிறகு பலர், பதவி உயர்வு இன்றி சிறப்பு எஸ்ஐகளாகவே ஓய்வு பெறுகின்றனர்.எஸ்ஐ-யில் இருந்து ஆய்வாளர் பதவி உயர்வுக்கு 10 ஆண்டு காலம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், 35 ஆண்டுகளுக்குமேல் பணிபு ரிந்து 55 வயதைக் கடந்த சிற ப்பு எஸ்ஐகளுக்கு, சிறப்பு காவல் ஆய்வாளர் (ஸ்பெஷல்) அல்லது ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். அதற்கான சூழல் உருவாகியுள்ளதாக அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சிறப்பு எஸ்ஐகள் சிலர் கூறியது: நேரடி எஸ்ஐயாக பணியில் சேருவோர் 10 ஆண்டுகளில் காவல் ஆய்வாளராகின்றனர். பட் டாலியன், ஆயுதப்படை பிரிவில் காலியிடங்களை பொருத்து, 10 ஆண்டுகளுக்கு முன்பே பதவி உயர்வு கிடைக்கிறது. 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, எவ்விதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் சிறப்பு எஸ்ஐ பதவி பெற்றபின், அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகும் பதவி உயர்வு இன்றி எஸ்ஐகளாகவே சுமார் 3 ஆயிரம் பேர் வரை பணிபுரிகிறோம். எங்களது நீண்ட காலக் கோரிக்கையை அரசு ஏற்க முன்வந்துள்ளது போன்ற சூழல் உருவாகியுள்ளது.
அனைத்து மாவட்டத்திலும் சிறப்பு எஸ்ஐகள் மற்றும் சிறப்பு எஸ்ஐ ஆனபிறகு போலீஸ் பயிற்சி முடித்தவர்கள், 2021 அக்டோபர் வரை 35 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், 2022 ஜனவரி, ஏப்ரல், ஜூலையில் 35 ஆண்டை கடந்த சிறப்பு எஸ்ஐகள் குறித்த விவரம் சேகரிக்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு வாரத்தில் எங்களுக்கு சிறப்பு காவல் ஆய்வாளர் அல்லது ஆய்வாளர் பதவி உயர்வு கிடைக்கலாம் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago