திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிடிபட்டனர். எந்தவொரு தடயமும் இல்லாமல், அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தி போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கத்தை அடுத்த எளாவூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த மாதம்15-ம் தேதி மர்மநபர்கள் சிலர் உள்ளே நுழைந்து அங்கிருந்த கேமரா மீது ஸ்பிரே அடித்து ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மூலம் உடைக்க முயற்சி செய்தனர்.
அப்போது, மாவட்ட கண்காணிப்பாளரின் அலைபேசி எண்ணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் இரவு ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீஸார் வருவதைக் கண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். போலீஸார் பைக்கில் அவர்களைதுரத்திச் சென்றனர். அப்போது, போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக கொள்ளையர்கள் எளாவூர், மகாலிங்க நகர் அருகே சென்றபோதுகாரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீஸார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், காரை கொள்ளையர்கள் ஆந்திர மாநிலம், குண்டூரை அடுத்த காவாலியில் இருந்து திருடி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க5 பேர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையே, கடந்த மாதம் 16-ம்தேதி இரவு இதே போன்று, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் மர்ம நபர்களால் ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, வடக்கு மண்டல போலீஸ் ஐஜி சந்தோஷ்குமாரின் ஆலோசனையின் பேரில், அரக்கோணம் போலீஸ் டிஎஸ்பிபுகழேந்தி கணேஷ் தலைமையில் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீஸார் கூட்டாக இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற தினங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது, கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பு, இந்த இரண்டு ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுத்த ஒரு நபரின் முகச்சாயல் ஒத்துப் போவது தெரிய வந்தது.
உடனடியாக, அவரின் வங்கிக் கணக்குஎண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை சேகரித்து அவரது தொலைபேசி எண்ணைக் கண்காணித்ததில், அந்த நபர் கும்மிடிப்பூண்டி, சிப்காட்டில் சரக்கு கொண்டு வந்த லாரியில் வந்தவர் என்பதும், அந்த லாரி கொள்ளை சம்பவம் நடைபெற்ற அன்று சிப்காட், பெரும்புதூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களை கடந்து சென்றுள்ளதும் தெரிய வந்தது.
கொள்ளையர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தபோது, கடந்த மாதம் 30-ம் தேதி இரவு அவர்கள் மீண்டும் ஆரம்பாக்கம் வழியாக சென்னையை நோக்கி வருவது தெரியவந்ததையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு வியூகம் அமைக்கப்பட்டு எளாவூர் நவீன சோதனைச் சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது, கொள்ளையர்களின் லாரி வருவதைக் கண்ட தனிப்படையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அந்த லாரியில் இருந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர்கள் ஹரியாணா மாநிலம், நுவும் மேவாத் ஜில்லாவைச் சேர்ந்த சாஜித், ஹர்ஷத், எமன்தன் மற்றும் ஒரு சிறுவன் என்பதும், இரு ஏடிஎம் மைய கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.45 ஆயிரம் பணம்,ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கப் பயன்படுத்திய வெல்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட மீதிப் பணத்தை ஹரியாணா மாநிலத்திலுள்ள அவர்களது உறவினர்களுக்கு அனுப்பி உள்ளது தெரிய வந்துள்ளதால், அப்பணத்தைக் கைப்பற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எந்தவொரு தடயமும் இல்லாத இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக, அறிவியில்ரீதியாக விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடிக்க உதவிய தனிப்படையைச் சேர்ந்த ஒருங்கிணைத்த உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபுவை, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நேரில் வரவழைத்து பாராட்டுகளைத் தெரிவித்து வெகுமதி வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago