ஆடுகளை மீட்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்: தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

By க.ராதாகிருஷ்ணன்

ஆடுகளை மீட்க முயன்ற போது தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து, லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் புனவாசிப்பட்டி சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் மகன் நவீன்குமார் (13). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர். அதேபகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் வசந்த் (13), கவின் என்கிற ஆ.மயில்முருகன் (12). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் இன்று (அக். 1-ம் தேதி) ஆடு மேய்த்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள தனியார் நிலத்தில் மண் எடுக்கப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த மழைநீர் குட்டையில் இறங்கிய ஆடுகளை மீட்க குட்டையில் இறங்கிய 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் 3 பேரின் சடலங்களை மீட்டனர். இது குறித்து, லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்