போலீஸ் இன்பார்மர் என கருதி விவசாயி கொலை; 10 பேருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

By செய்திப்பிரிவு

போலீஸ் இன்பார்மர் என கருதி விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சியை அடுத்த ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் சுப்பன் என்ற பாலசுப்பிரமணியன் (60). விவசாயியான இவர், கடந்த 2013 ஜூன் 27-ம் தேதி பெரிய கொத்தமங்கலம் பகுதியில் உள்ள பொதுக் குளத்தின் கரையில் நண்பர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கள்ளிக்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் ஆறுமுகம் என்பவர் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கள்ளிக்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (36), அவரது ஆதரவாளர்கள் ஆ.சங்கர் (32), ஆ.தர்மா என்ற தர்மராஜ் (31), மோகன் என்ற நீலமேகம் (33), சம்பத் என்ற சம்பத்குமார் (34), மு.வடிவேல் (39), வை.மணிவேல் (36), மா.பிரபு (32), மோகன்ராஜ் (32), ஜம்புலிங்கம் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவுற்ற நிலையில், வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி தங்கவேல் நேற்று தீர்ப்பளித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கும் கொலை குற்றத்துக்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும், கொலை முயற்சி குற்றத்துக்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டது ஏன்?

இந்த வழக்கு குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

ராம்ஜிநகரை அடுத்த கள்ளிக் குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பிராட்டியூரில் டிபன் கடை நடத்தி வந்தார். கடந்த 2013 ஜூன் 26-ம் தேதி ராஜேந்திரனுக்கு தம்பி உறவு முறை கொண்ட சந்தோஷ் என் பவர், திண்டுக்கல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராம்ஜிநகரைச் சேர்ந்த சிலர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ராஜேந்திரன் கடைக்கு அருகே அந்த ஆட்டோவை சந்தோஷ் முந்திச் செல்ல முயன்றார்.

அப்போது ஆட்டோவில் இருந் தவர்களுக்கும் சந்தோஷுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள் ளது. இதையடுத்து ராஜேந்திரன், சந்தோஷ் உள்ளிட்ட சிலர் ஆட் டோவை மறித்து தாக்கினர். இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள் ளது. பின்னர், ஆட்டோவில் இருந்த யுவராஜ், குமார் உள்ளிட்டோர் ராஜேந்திரனின் கடைக்கு சென்று அவரையும் அங்கிருந்தவர்களை யும் தாக்கியுள்ளனர். ராஜேந் திரனின் காரையும் சேதப்படுத்தி யுள்ளனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே, தாக்குதல் சம் பவம் தொடர்பாக போலீஸாருக்கு சுப்பன் என்கிற பாலசுப்பிரமணி யன்தான் தகவல் தெரிவித்ததாக ராஜேந்திரன் தரப்பினர் கருதியுள்ள னர். இதையடுத்து, ராஜேந்திரனின் அண்ணன் ராஜமாணிக்கம் உள் ளிட்ட 10 பேர் கும்பல், கொத்தமங்கலம் சென்று, அங்கு குளக்கரையில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். அவருடன் படுத்திருந்த ஆறுமுகம் உள்ளிட்டோர் சிலர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றம்சாட் டப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண் டனை பெற்றுத் தந்த போலீஸாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் பாராட்டினார்.

லேப்டாப் திருடியவர்

கொலை செய்யப்பட்ட பால சுப்பிரமணியன், இளவயதில் திருச்சி பேருந்து நிலையம் உள் ளிட்ட இடங்களில் லேப்டாப் உள் ளிட்டவைகளை திருடியதாக பல் வேறு வழக்குகள் இருந்தன. வய தான பின்னர், திருட்டு தொழிலை விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந் துள்ளார். மேலும், போலீஸாருக்கு தகவல் அளிக்கும் இன்பார்மராக வும் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. போலீஸார் மத்தியில் இவருக்கு லேப்டாப் பாலு என்ற பெயரும் உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்