நேரடி வகுப்புகளுக்குத் தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

By கி.மகாராஜன்

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்கத் தடை கோரிய மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங்குவது சரியாக இருக்காது. எனவே 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்