புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தேங்காய் தண்ணீர் பிரசாதக் கருவி: மத்திய இணை அமைச்சர் தொடங்கிவைப்பு

By வி.சுந்தர்ராஜ்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாதக் கருவியை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் விதமாக, இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழக சார்பில் வீணாகும் தேங்காய் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீன கருவி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் நேர்த்திக் கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீரைச் சுத்திகரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்தக் கருவி கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய் எனவும், இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நீர்வளத்துறை துறை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இன்று (செப். 27) பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய உணவு பயிர் பதனக் கழக இயக்குநர் அனந்த ராமகிருஷ்ணன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்