புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் 

By அ.முன்னடியான்

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 5 நகராட்கள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துக்களில் உள்ள 1,149 பதவிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 21, 25, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக தலைமை நியமித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (செப். 25) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற அக். 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தெரிவு செய்யவும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களை தெரிவு செய்வும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிபெறும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் புதுச்சேரி மாநில தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களாகக் கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செம்மலை, முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டக் அதிமுக செயலருமான செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சம்பத், புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர், காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளர் ஓமலிங்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களோடு, புதுச்சேரி மாநில கிழக்கு, மேற்கு மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், அதிமுக தொண்டர்களும் இணைந்து, அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.’’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்