உயர் நீதிமன்ற மதுரைகிளையில் போலீஸாருக்கான கட்டிடத்தை பய ன்படுத்த வெளிமாவட்ட போலீஸார் தடுக்கப்படுவதால், வெயிலுக்கு ஒதுங்கவும், உடைமாற்றவும் வசதியில்லாமல் தவிக்கின்றனர்.
மதுரையில் செயல்படும் உயர் நீதிமன்ற கிளையில் மதுரை, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் இந்த வழக்குகள் தொடர்பாக அரசு வழக்கறிஞர்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதற்காக, உயர் நீதிமன்ற கிளைக்கு வருகி ன்றனர்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையைச் சேர்ந்த போலீஸார் நள்ளிரவில் புறப்பட்டு அதிகாலை மதுரை வந்து சேர்கின்றனர். இதில் தவறினால் நீதிமன்ற பணிகள் முடிந்து அரசு வழக்கறிஞர் வரும் வரை நீதிமன்றத்திலேயே காத்தி ருக்க வேண்டும்.
அலுவல் பணி காரணமாக உயர் நீதிமன்ற கிளைக்கு வரும் தென் மாவட்ட போலீஸார் உடை மாற்றம் செய்யவும், இயற்கை உபாதைகளை தணிக்கவும் தனி கட்டிட வசதியில்லாமல் சிரமப் பட்டனர். இந்த சிரமத்தைப் போக்குவதற்காக போலீஸார் தங்கி, ஓய்வெடுப்பதற்காக நீதிமன்ற வளாகத்தின் முன்பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் காவலருக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதனை தலைமை நீதிபதி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அலுவல் பணிக்காக உயர் நீதிமன்றம் வரும் வெளி மாவட்ட போலீஸார் புதிய கட்டிடத்தில் உடைமாற்றம் செய்யவும், ஓய்வு எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 20 நாள் களாக இப்புதிய கட்டிடத்தை பயன்படுத்த வெளிமாவட்ட போலீஸாருக்கு அனுமதி மறுக் கப்படுகிறது. உயர் நீதிமன்ற கிளை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மதுரை போலீஸார் மட்டும் பயன்படுத்துகின்றனர். இதனால் வெளி மாவட்ட போலீஸார் திறந்தவெளியில் உடைகளை மாற்றும் பழைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், உயர் நீதிமன்ற கிளை பாதுகாப்பு பணிக்கு சுழற்சி அடிப்படையில் நியமனம் செய்யப்படும் வெளிமாவட்ட போலீஸாரையும் புதிய கட்டிடத்தை பயன்படுத்த உள்ளூர் போலீஸார் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் பணி முடிந்தும் பக்கத்தில் உள்ள தனியார் இடங்களில் வாடகைக்கு தங்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து மதுரை போலீ ஸார் கூறியதாவது: போலீ ஸாருக்கான அந்தக் கட்டிடத்தை பயன்படுத்த அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அந்த கட்டிடத்தில் தங்கியிருக்கும் உயர் நீதிமன்ற கிளை பாதுகாப்பு போலீஸாரின் தொப்பி, விசில், காலணி உள்ளிட்ட பல பொருள்கள் காணாமல்போயின. இவ்வளவு ஏன் போலீஸாரின் சட்டைப் பட்டன் களும் திருடப்பட்டன. மேலும் சாப்பிட்டுவிட்டு பார்சல்களையும் அங்கேயே போட்டுவிட்டு செல் கின்றனர். இதனால் வெளி மா வட்ட போலீஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றனர்.
ஒரே துறையில் பாரபட்சம் ஏன்?
இது தொடர்பாக தென் மாவட்ட போலீஸார் ஒருவர் கூறும்போது, ‘அலுவல் பணிக்காகவே பல மணி நேரம் பயணம் செய்து உயர் நீதிமன்றம் வருகிறோம். இங்கு உடைகளை மாற்றவும், இயற்கை உபாதையை தணிக்கவும் சரியான வசதியில்லை. போலீஸாரின் பயன்பாட்டுக்காகவே அந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடத்தை மதுரை போலீஸார் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். வெளி மாவட்ட போலீஸார் நுழைய தடை விதித்துள்ளனர். ஒரே துறையில் ஏன் இந்த பாரபட்சம்?
நாங்கள் நாள் முழுவதும் அங்கு தங்கப்போவதில்லை. உடைகளை மாற்றிவிட்டு உடனடியாக போய்விடுகிறோம். அதை தடுப்பது சரியல்ல. போலீஸாருக்கு தனி ஓய்வறை இருந்தும், கொளுத்தும் வெயிலில் ஒதுங்க இடமில்லாமலும், திறந்தவெளியில் உடைமாற்றவும், உணவு உண்ணும் பரிதாப நிலைக்கு வெளி மாவட்ட போலீஸார் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago