வரும் 27 ஆம் தேதியன்று நாடுமுழுதும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள முழு அடைப்பில், தமிழக விவசாயிகள் அனைவரும் பங்கேற்கவேண்டும் என திமுக விவசாய அணி மாநிலத் தலைவர் என்.கே.கே. பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
இந்திய விவசாயத்தை வேரறுக்க மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய வேளாண் சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரியும் , பெட்ரோல் டீசல் விலை மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம், பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் ஜனநாய விரோதப்போக்கு இவைகளை கண்டித்து நாடுமுழுதும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள முழு அடைப்பில், தமிழக விவசாயிகள் அனைவரும் பங்கேற்கவேண்டும் என தி.மு.க. விவசாய அணி மாநிலத் தலைவர் என்.கே.கே. பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
மாநில விவசாய அணி தலைவர் என்.கே.கே. பெரியசாமி தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது-
மத்திய பாஜக அரசு தனது அசுர பலத்தைமட்டுமே மூலதனமாக கொண்டு பல்வேறு மக்கள் விரோத சட்டங்களையும், சட்ட திருத்தங்களையும் கொண்டுவது ஏழை எளிய நடுத்தர மக்களை வேதனையில் ஆழ்த்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக விவசாய நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் எண்ணெய் கிணறுகளையும், மீத்தேன் திட்டத்தையும் கொண்டுவந்து விவசாய நிலங்களை பாழ்படுத்தியது. மத்திய அரசின் தயவால் தனது ஆட்சிக்காலத்தை கடத்திக்கொண்டிருந்த கடந்த அ.தி.மு.க. ஆட்சி மத்திய பாஜக அரசை கண்களை மூடிக்கொண்டு ஆதரித்துவந்தாலும், ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாகவும், விவசாய நலனில் அக்கறைகொண்ட இயக்கமாகவும் திமுக செயல்பட்டு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற பல்வேறு கட்ட போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதன் விளைவாக பல்வேறு வேளாண் விரோத செயல்பாடுகள் தமிழகத்தில் அரங்கேற முடியாமல் போனது. மேலும் தமிழகம் குறிப்பாக டெல்டா பகுதி பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பும் வெளியானது.
கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளை வஞ்சித்துவந்த அதிமுக அரசு விவசாயிகளை கைவிட்ட நிலையில், தமிழக விவசாயத்தின் முன்னேற்றத்திற்காக திமுக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை தாயுள்ளத்தோடு கேட்டறிந்து, விவசாய சங்கப் பிரதிநிதிகள், அனைத்துகட்சி பிரதிநிதிகள் அனைவரையும்
ஒன்றினைத்து விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டதன் விளைவாக இன்றைக்கு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் திமுக அன்று அதிமுக செய்யத் தவறிய பல்வேறு விவசாய ஆதரவு திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
கழக ஆட்சியில் ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் விவசாய ஆதரவுதிட்டங்கள் முழு வீச்சில் விவசாயிகளை சென்றடைய போர்கால அடிப்படையில் நீர்நிலைகள் மற்றும் வடிகால் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல், உரிய நேரத்தல் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, குருவை சம்பா தொகுப்புத்திட்டங்கள், போதுமான விதைநெல், இடுபொருட்கள் இருப்பு வைத்தல், விவசாய உற்பத்திப் பொருட்களை பாதுக்காக்க கிடங்குகள், கரும்பு கொள்முதல் நிலுவைகளை விடுவிக்க அரசானை, நெல்லுக்கு கூடுதல் போனஸ் இப்படி பல்வேறு திட்டங்களைமுதல் 100 நாட்களுக்குள் நிறைவேற்றியும் தந்திருக்கிறது. .
இப்படி தமிழக விவசாயத்தின் நாலனில் முழுக்கவனம் செலுத்தி வரும் கழக அரசு ஒட்டுமொத்த இந்தியாவின் விவசாயத்தின் மீதும் உண்மையான அக்கறையுள்ள அரசாக செயல்படுவதன் விளைவாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும் ஆதரவாக தமது நிலைப்பாட்டை கொண்டிருப்பதோடு, அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளையும் தமிழகத்தில் நடத்தி அதன் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது.
ஆனால் மத்திய அரசோ பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய பண முதலைகளுக்கும் ஆதரவாக செயல்படும் ஒரே நோக்கத்தில் மழை, வெய்யில், குளிர், இவைகளை பாராமல் டெல்லி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராடும் விவசாய போராட்டத்தை கண்டுகொள்ளாமல் எதேச்சதிகார போக்கோடு செயல்பட்டு வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தோடும் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களான விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று புதிய வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி அகில இந்திய விவசாய கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு நடத்த இருக்கும் செப்டம்பர் 27 நாடு தழுவிய முழு அடைப்பில் தமிழக விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் பொதுமக்களும் வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து சமூக அமைப்புக்களும் என அனைவரும் பங்கேற்க வேண்டும் .
செப்டம்பர் 27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் அமைதியான வழியிலான போராட்டம், போராட்டத்தால் அத்தியாவசிய பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்கிற உறுதிமொழியோடு அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கும் இந்த நாடுதழுவிய போராட்டத்தில் விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் என அனைவரும் பங்கேற்று முழுஅடைப்பு போராட்டம் முழு வெற்றியடையும் விதமாக நடத்த வேண்டும்.
செப்டம்பர் 27 அன்று தமிழகத்தில் நடைபெற இருக்கும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறவேண்டும், பெட்ரோல் டீசல் விலை மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம், பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் ஜனநாய விரோதப்போக்கு இவைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவு என்பது ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிரொலிக்கும் வகையில் அமைந்திடவேண்டும்.
நாம் ஆதரவளிக்க இருக்கும் இந்த போராட்டம் விவசாய விரோத மத்தியஅரசின் வேளாண் கொள்கைகளுக்கு இறுதி தீர்ப்பு எழுதப்போகும் விதமாக அமையவேண்டும் என்கிற குறிக்கோளோடு தமிழக அரசு எடுக்கும் விவசாய ஆதரவு செயல்பாடுகளுக்கு நாம் முழு ஒத்துழைப்பையும் அரசியல் பாகுபாடுகள் இன்றி ஒட்டுமொத்த விவசாயத்தின் நலனை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுத்திட வேண்டும்.
திமுக விவசாய அணி நிர்வாகிகள், மாவட்ட ,மத்திய, நகர மற்றும் பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டச் செயலாளரின் ஆலோசனைகளை பெற்று இந்த அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு திமுக விவசாய அணி மாநிலத் தலைவர் என்.கே.கே. பெரியசாமி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago