எப்போதும் எப்படி இளமையாகவே இருக்கிறீர்கள் என்று சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினிடம், அங்கே வந்த பெண் கேள்வி எழுப்பிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை, அடையாறு தியாசாபிகல் சொசைட்டி வளாகத்தில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருந்தார்.
அங்கே நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்கள் சிலரிடம் உரையாடினார் முதல்வர். ''சார் இரு வருடங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் உங்களைச் சந்தித்தேன். நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்று கூறினேன். நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்கிறீர்கள். இது அப்படியே தொடர வேண்டும்'' என்று பெண் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், ''கால்பந்து விளையாட்டுக்காக வெளிநாடு சென்றுள்ள உங்கள் பேரன் வெற்றியுடன் திரும்ப வேண்டும். அவர் கடற்கரையில் பயிற்சி எடுக்கும்போது பார்த்திருக்கிறோம்'' என்று அப்பெண் கூறினார்.
» கோடநாடு எஸ்டேட் ஊழியர் மரணம்: தந்தை, சகோதரரிடம் விசாரணை
» சாலை நடைபாதையில் கிரானைட் கற்கள் பதிப்பா?- வரிப் பணத்தை வீணாக்காதீர்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
மேலும் அவர், ''கடைசியாக உங்களிடம் ஒன்று கேட்கிறேன். எப்படி எப்போதுமே இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கிறீர்கள்?'' என்று கேட்க, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின், ''உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதே காரணம்'' என்று பதிலளித்தார்.
மேலும் சில நிமிடங்கள் முதல்வர் ஸ்டாலின் உரையாடிய காணொலி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago