உள்ளாட்சித் தேர்தலில் 3 மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாவட்டஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, ஊராட்சி வார்டுஉறுப்பினர் பதவியை பொருத்தவரை மாவட்ட வாரியாக காஞ்சிபுரம் - 11, செங்கல்பட்டு - 14, ராணிப்பேட்டை - 9, விழுப்புரம் - 24, தென்காசி - 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியை பொருத்தவரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் - 13, வாலாஜா - 15, உத்திரமேரூர் - 17, ஸ்ரீபெரும்புதூர் - 12, குன்றத்தூர் - 18 என 75 வேட்பாளர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் - 14, ஆற்காடு - 11, காவேரிப்பாக்கம் - 7, நெமிலி - 12, சோளிங்கர் - 9,நிமிரி - 15, வாலாஜா - 13 என 81 வேட்பாளர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் காணை - 20, விக்கிரவாண்டி - 20, கோலியனூர் - 18, கண்டமங்கலம் - 23, ஒலக்கூர் - 14,மயிலம் - 20, மரக்காணம் - 25, வானூர் - 26, செஞ்சி - 22, வல்லம் - 19, மேல்மலையனூர் - 22என 229 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

28 மாவட்டங்களில் நடக்கும் தற்செயல் தேர்தலுக்காக, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 வேட்பாளர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 37 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE