காதலர் தின கொண்டாட்டத்தில் ரோஜாவுக்கு மவுசு குறைந்ததா? - விற்பனையில்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

உலகம் முழுவதும் இன்று (பிப். 14-ம் தேதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத் தில், காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரோஜா மலர்களை வழங்குவர். அதனால், வழக்கமான நாட்களைவிட, காத லர் தினத்தன்று ரோஜா மலர்கள் இரட்டிப்பு விலையில் விற்கும். காதலர் தினத்துக்கு முந்தைய வாரம் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடு களுக்கு ரோஜா மலர்கள் அதிக ளவில் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த ஆண்டு காதலர் தினத் தையொட்டி, சந்தைகளில் ரோஜா மலர்களுக்கு பெரிய அளவில் வர வேற்பு இல்லை. கடந்த ஆண்டை விட ரோஜா பூக்கள் வருகையும், விலையும் குறைந்திருந்தது.

வெளிநாட்டு உயர்ரக ரோஜா மலர்கள் ஒரு தொகுப்பு (20 பூக்கள்) ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகி இருந் தாலும் ஏற்றுமதி குறைந்திருந் தது. உள்நாட்டு சந்தையில் குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு தொகுப்பு ரோஜா மலர்கள் (2-ம் ரகம்) ரூ.180 முதல் ரூ.200 வரை மட்டுமே விற்றது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி கணபதி கூறியதாவது:

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு காதலர் தினத்தன்று அதிகளவு பூக்கள் விற்பனை ஆனது. ஒரு தொகுப்பு மலர்கள், ரூ. 350 வரை விற்றது. இந்த ஆண்டு வரவேற்பு இல்லாததால், குறைந்த அளவு பூக்களே விற்பனைக்கு வந்தன. ஒரு தொகுப்பு சிகப்பு ரோஜா மலர்கள் ரூ. 200-க்கு விற்றது. மற்ற ரோஜா மலர்கள் ஒரு தொகுப்பு ரூ.100-க்குத்தான் விற்றது.

கடந்த ஆண்டு, காதலர் தினத் துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிக அளவில் மலர்கள் விற்பனையாகவில்லை. இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் வந்ததால் ரோஜா மலர்களை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்