எம்எல்ஏ, எம்பி பதவிகளைக் காட்டிலும் உள்ளாட்சி அமைப்பின் பதவிகள் அதிகாரம் நிறைந்தவை என அமைச்சர் எஸ்.முத்துசாமி பேசினார்.
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊரக உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற் றது. சங்கராபுரம் சட்டபேரவை உறுப்பினரும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பா ளருமான உதயசூரியன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப் பாளராகக் கலந்து கொண்ட வீட்டு வசதித் துறை அமைச்சரும், ஈரோடுவடக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.முத்துசாமி பேசியது:
உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்துசெயல்பட்டால் வெற்றி பெறமுடியும். கட்சியின் தலைமை நிர்வாகி கள் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப இதர நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
கள நிலவரம் அறிந்து அதற்கேற்ற வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். எம்எல்ஏ, எம்பி பதவிகளைக் காட்டிலும் உள்ளாட்சி அமைப்பின் பதவிகள் அதிகாரம் நிறைந்தவை என்பதால் கட்சியினர் கட்டுக்கோப்போடு இணைந்து தேர்தல் பணியாற்றி வெற்றி வாகை சூடவேண்டும் என்றார்.
கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினரும், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான வசந்தம் கார்த்திக்கேயன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago